/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல்
/
தி.மு.க., ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல்
ADDED : மே 01, 2024 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் தாலுகா எஸ்.கோட்டைப்பட்டி சங்கரபாண்டி 58. சேடப்பட்டி ஒன்றிய தி.மு.க., செயலாளர். இவரது மனைவி மல்லிகா குடிச்சேரி ஊராட்சி மன்ற தலைவர். சங்கரபாண்டி அதே ஊரில் உள்ள பஸ் ஸ்டாப்பில் உறவினர் ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த மணி என்பவரின் மகன்கள் ராணுவ வீரர்கள் அழகுமலைகண்ணன் 33. முருகேசன் இருவரும் சங்கரபாண்டியை தாக்கினர். இதில் தலையில் காயமடைந்து சங்கரபாண்டி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். சாப்டூர் போலீசார் அழகுமலை கண்ணனை கைது செய்தனர். முருகேசனை தேடி வருகின்றனர்.