ADDED : மே 29, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை ; மதுரையில் திருமண விவகாரத்தில் அரசு பாலிடெக்னிக் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை ஆண்டாள்புரம் வெங்கடேஸ்வரன் 50. அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி ஆசிரியராக உள்ளார். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு யோகா வகுப்புக்கு சென்றார். பாலிடெக்னிக் எதிரே வந்த போது வழிமறித்த 4 பேர் அவரை கடுமையாக தாக்கியதில் மயக்கமடைந்தார். தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விசாரணையில் வெங்கடேஸ்வரன் சகோதரரான திருச்சி மின்அமலாக்கத்துறை அதிகாரி கொண்டல்ராஜ் மகனுடைய விவாகரத்து வழக்கில் சகோதரர் தரப்பிற்கு ஆதரவாக இருப்பதால் தாக்கப்பட்டது தெரிந்தது.