ADDED : ஜூலை 09, 2026 09:22 PM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அரசு ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. கிராமங்களில் தரமான மருத்துவ சேவை வழங்கும் திறன்மேம்பாட்டு செவிலியர் பணியிடங்கள் உள்ளிட்ட எந்தவொரு நிரந்தர செவிலியர் பணியிடங்களையும் மறுபணியாக்கம் செய்வதை கைவிட வேண்டும்.
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிரந்தர செவிலியர் காலிப் பணியிடங்களைத் தோற்றுவித்து எம்.ஆர்.பி., ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட துணைத் தலைவர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார். மாநில தலைவர் பாண்டி, அரசு ஊழியர் சங்க பொருளாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன், நிர்வாகிகள் சின்னப்பொன்னு, மாரி, மாரியப்பன், வேல்முருகன், ஆறுமுகம், சிவராணி, கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.
