ADDED : ஆக 05, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: அமைச்சர் மூர்த்தி அறிக்கை: மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி ஆக. 7 ல் வாடிப்பட்டியில் அமைதி ஊர்வலம் நடக்க உள்ளது.
காலை 10:00 மணிக்கு பழைய பத்திர பதிவு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பஸ்ஸ்டாண்ட் வரை அணிவகுத்து செல்ல உள்ளனர். அண்ணாத்துரை சிலை முன்பு கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். இதில் தி.மு.க.,வினர் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.