ADDED : ஏப் 18, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழில் அழகாக எழுதுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவில் கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான கையெழுத்து போட்டி மதுரை மீனாட்சி அரசினர் கல்லுாரியில் ஏப்., 24 காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
ஒரு கல்லுாரியில் இரு மாணவர்கள் வீதம் முதல்வரின் பரிந்துரை கடிதம், அடையாள அட்டையுடன் பங்கேற்கலாம். ஒருமணி நேர போட்டிக்கு எழுதுதாள் வழங்கப்படும். தமிழ்ப்பத்திகளை மூன்று பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். போட்டி நடக்கும் நாளன்று காலை 9:00 மணிக்கு பேராசிரியர் முத்துராணியிடம் பெயரை பதிவு செய்ய வேண்டும்.

