/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுற்றுலா தொழில் முனைவோருக்கு விருது
/
சுற்றுலா தொழில் முனைவோருக்கு விருது
ADDED : ஆக 07, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா தொழில்முனைவோர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
சுற்றுலா துறை சார்பில் தமிழக, உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், பயண பங்குதாரர், விமான பங்குதாரர், தங்குமிடம், உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் உணவகம், தங்குமிடம், படகு இல்லம், பல்வேறு சுற்றுலா பிரிவுகளின் ஏற்பாட்டாளர், சாகச சுற்றுலா, முகாம் ஏற்பாட்டாளர், சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனத்திற்கு விருது வழங்கப்படுகிறது. மதுரை மாவட்ட சுற்றுலா தொழில்முனைவோர்கள் www.tntourismawards.comல் ஆக. 20 க்குள் விண்ணப்பிக்கலாம்.