ADDED : ஜூலை 16, 2026 05:35 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி உள்தர உறுதி மையம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் ‘நாட்டை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். பேராசிரியர் கலைவாணி வரவேற்றார். செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். வழக்கறிஞர் முத்துராமலிங்கம், சட்டக் கல்லுாரி மாணவி பிரியங்கா பேசினர். மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.
