ADDED : ஜூன் 14, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
பெருங்குடி: சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் உன்னத் பாரத் அபியான், மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம், திருப்பரங்குன்றம் தோட்டக்கலை துறை சார்பில் பெருங்குடி விவசாயிகளுக்கு விளை நிலம் காப்போம் இயக்கம், விழிப்புணர்வு முகாம் நடந்தது
கல்லுாரி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபா, உதவி இயக்குனர் திவ்யா, உதவி அலுவலர் ஆறுமுகம். ‘மண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாத்தல், இயற்கை விவசாய முறைகள், சமச்சீர் உரம் பயன்பாடு, மண் பரிசோதனை அடிப்படையில் மண்ணில் ஊட்டச்சத்துக்களை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்கு விளக்கம் அளித்தனர்.
உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன், இருளப்பன், தமீம் அசாருதீன் ஏற்பாடுகள் செய்தனர்.
