ADDED : ஏப் 02, 2024 06:26 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம் : விருதுநகர் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருநகர் சித்தி விநாயகர் கோயில் முன்பு கலைக்குழுவினரின் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிக்குமார், கூடுதல் அலுவலர் சேதுராமன், தாசில்தார்கள் அனிஸ் சத்தார், சரவணன் தலைமை வகித்தனர். 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும்.
பணம் பெறாமல் ஓட்டளிக்க வேண்டும். 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து ஓட்டளிப்பது உள்ளிட்ட கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. உறுதிமொழி ஏற்கப்பட்டது.
