ADDED : ஏப் 07, 2024 04:15 AM
அ நிறம் | அளவு
மேலுார் : மேலுாரில் மாவட்ட நிர்வாகம், வைகை பொறியியல் கல்லுாரி சார்பில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
துணை தாசில்தார் சாந்தி தலைமை வகித்தார். முதல்வர் சிவரஞ்சனி முன்னிலை வகித்தார். ஆர்.ஐ., முனியசாமி, கல்லுாரி நிர்வாகிகள் துவக்கி வைத்தனர். கல்லுாரி நிர்வாக அதிகாரி மனோகரன் தலைமையில் பேராசிரியர்கள், மாணவர்கள் தேர்தல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
