ADDED : மே 21, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரையை தூய்மை, பசுமை நகராக மாற்ற மக்கள் ஒத்துழைப்பு தாருங்கள் என வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் திருப்பரங்குன்றத்தில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலவிஷ்ணு முன்னிலை வகித்தார். திரளான துாய்மைப் பணியாளர்கள் திருப்பரங்குன்றம் பஸ்ஸ்டாண்டில் இருந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
