ADDED : ஏப் 30, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை எஸ்.பி.ஓ.ஏ., சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆசிரியர்களுக்கான உடல்நல விழிப்புணர்வு கருத்தரங்கு, எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்வி அறக்கட்டளை செயலாளர் செந்தில்ரமேஷ் முன்னிலையில் நடந்தது.
முதல்வர் லதா திரவியம் தொடங்கி வைத்தார். சரண்யா, நித்யா வரவேற்றனர். அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் ஆயிஷா, ஜேசு உடல்நல விழிப்புணர்வுகள் குறித்தும், புற்றுநோய்,நரம்பியல் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் பேசினர். சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். துணைமுதல்வர் அனிதா கரோலின், தலைமையாசிரியர் பொற்கொடி, ஆசிரியர்கள் பங்கேற்றனர். மதுமிதா, நர்மதா நன்றி கூறினர்.
