நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயில்களில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடந்தது.
மகா வராஹி கிரஹாலயத்தில் ஆடிப்பூர திருவிழா உச்ச நிகழ்ச்சியாக அம்மனுக்கு அபிஷேகம், பூஜை முடிந்து, வளையல்கள் அலங்காரம் நடந்தது. கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு களி, ஐந்து வகை சாதம் வழங்கப்பட்டது.
* திருப்பரங்குன்றம் வட்டார இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட கிரிவலரோட்டிலுள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜை முடிந்து, கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, ஐந்து வகை சாதம் பரிமாறப்பட்டது.