ADDED : ஏப் 29, 2024 05:35 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் பகுதிக்கு திண்டுக்கல் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து பலாப்பழங்கள் விற்பனைக்கு வருகின்றன.
இப்பகுதிகளில் பலாப்பழ சீசன் நாட்களில் ஏராளமான சிறு வியாபாரிகள் விற்பனையில் ஈடுபடுவர். இவர்கள் பலாச்சுளைகளை எண்ணிக்கையில் விற்பனை செய்தனர்.
இந்தாண்டு பலாச்சுளைகளை கிலோ ரூ.160க்கு விற்பனை செய்கின்றனர். பலாச் சுளை விரும்பும் பலருக்கும் விலை திகைப்பை தந்தாலும், சுவை இனிப்பை தருமே என்று வாங்கிச் செல்கின்றனர்.
