ADDED : ஆக 08, 2024 05:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார், சென்னகரம்பட்டி பகுதியில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் இப் பகுதியைச் சேர்ந்த பாண்டி, குமார், மாணிக்கம் உள்பட பல விவசாயிகளின் வாழை மரங்கள் அடியோடு சாயந்தது.
விவசாயி பாண்டி கூறியதாவது: கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் செலவு செய்து வாழை விவசாயம் செய்துள்ளேன். வாழை பயிரிட்டு 9 மாதங்களாகிறது. 15 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் மரங்கள் மற்றும் வாழைத் தார்கள் சாய்ந்தன.
இதனால் பாதித்த விவசாயிகள் கடனைக் கட்ட முடியாமல் செய்வதறியாது திகைக்கிறோம். வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து கடன்களை தள்ளுபடி செய்வதோடு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.