ADDED : மே 01, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில், 10 கோயில்களின் உண்டியல்கள் எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக ரூ. 1.22 கோடி, தங்கம் 819 கிராம், வெள்ளி 642 கிராம் இருந்தது.
கூடலழகர் கோயில், 2 உபகோயில்களிலும் உண்டியல்கள் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ. 10 லட்சத்து 91 ஆயிரத்து 51, தங்கம் 47 கிராம், வெள்ளி 73 கிராம், வெளிநாட்டு நோட்டுகள் 3 இருந்தன.
செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் முன்னிலை வகித்தார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் செயல் அலுவலர் சுரேஷ், அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி கண்காணிப்பாளர்களாக உடனிருந்தனர். தக்கார் பிரதிநிதியாக சுந்தரராஜன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், கோயில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.