/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கூடைப்பந்து: கல்வி சர்வதேச பள்ளி முதலிடம்
/
கூடைப்பந்து: கல்வி சர்வதேச பள்ளி முதலிடம்
ADDED : ஆக 06, 2024 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சென்னை பல்லாவரம் வேல்ஸ் வித்யாஸ்ரம் பள்ளியில் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மாநில கூடைப்பந்து போட்டிகள் 2 நாட்கள் நடந்தன.
இதில் பங்கேற்ற சோழவந்தான் நகரியில் உள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளி அணி காலிறுதியில் செட்டிநாடு வித்தியாஸ்ரம் அணியை 40--10 எனவும், அரை இறுதியில் வேலம்மாள் வித்யாலயா அணியை 52--16 எனவும் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் சென்னை செயின்ட் ஜான்ஸ் பொதுப்பள்ளி அணியை 58--12 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது. வெற்றிபெற்ற வீரர்களை பள்ளி இயக்குனர், நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.