/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குளிக்கிற நீரே குடிநீர்; பால்குடியில் பரிதாபம்
/
குளிக்கிற நீரே குடிநீர்; பால்குடியில் பரிதாபம்
ADDED : ஏப் 18, 2024 03:48 AM

மேலுார் : மேலுார் அருகே பால்குடியில் குளிக்கிற நீரையே குடிநீராக பயன்படுத்தும் அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது.
பால்குடியில் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப் பகுதி மக்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் மந்தை அருகே உள்ள மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்ய ரூ.2.25 லட்சத்தில் போர்வெல் அமைக்கப்பட்டது.
போதுமான தண்ணீர் கிடைத்ததால் மோட்டாரை பொருத்தி, மேல்நிலை தொட்டியில் தண்ணீர் நிரப்பி பரிசோதனை செய்தனர்.
பிறகு ஊராட்சி நிர்வாகத்தினர் மோட்டாரை கழற்றிச் சென்றனர். அதன்பின், இதுவரை போர்வெல் மற்றும் மோட்டார் எதுவும் பயன்பாட்டிற்கு வராமல் புதர்மண்டி கிடக்கிறது. குடிநீர் பற்றாக்குறையால் குளிக்கிற தண்ணீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
குடிநீருக்காக பல கி.மீ., துாரம் மக்கள் குடிநீரை தேடி அலைகின்றனர். எனவே, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து போர்வெல்லை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். அதன்மூலம் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்பது இப்பகுதியினர் எதிர்பார்ப்பு.

