/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காப்பீடு நிறுவனங்களில் டிஜிட்டல் வசதியால் நன்மை
/
காப்பீடு நிறுவனங்களில் டிஜிட்டல் வசதியால் நன்மை
ADDED : மார் 06, 2025 04:42 AM

மதுரை: மதுரை மீனாட்சி மகளிர் அரசு கலைக் கல்லுாரியில் மதுரை இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் (எம்.ஐ.ஐ.,) சார்பில் 'விஷன் 2047 - அனைவருக்கும் இன்சூரன்ஸ்' எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி முதல்வர் வானதி தலைமை வகித்தார். வர்த்தக துறைத் தலைவர் குளோரி வரவேற்றார்.
சுவாமிநாதன் பேசியதாவது: தனிநபர், வணிக பாதுகாப்பு, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது போன்றவற்றில் காப்பீட்டின் பங்கு அளவற்றது.சீனாவுக்கு அடுத்து 2வது பெரிய ஆன்லைன் சந்தையாக நம் நாடு உள்ளது. காப்பீட்டுத் துறையில் டிஜிட்டல் வசதி மூலம் பாதிப்பு பகுதிகளை இருந்த இடத்தில் இருந்தே ட்ரோன் மூலம் பார்வையிடுவதால் நேரம் மிச்சமாகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் சந்தைப்படுத்துதல், பாலிசி சேவைகள் உள்ளிட்டவற்றில் ஏ.ஐ., பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆயுஷ்மான் பாரத் போன்ற அரசு திட்டங்களை திறமையாக கையாள முடிகிறது என்றார்.
பேராசிரியர் கேத்தராஜ் நன்றி கூறினார். எம்.ஐ.ஐ., செயலாளர் சீனிவாசன், பேராசிரியர் பொன்ராமு ஒருங்கிணைத்தனர். மும்பை இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா முன்னாள் ஆலோசகர் சசிதரன் குட்டி, எம்.ஐ.ஐ., துணைச் சேர்மன் சதீஸ்குமார், பேராசிரியர்கள் ரீனா, மீனாட்சி, சமீன் பானு, தேன்மொழி பங்கேற்றனர்.