/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் பேரையூர் கண்மாய்; அரை நுாற்றாண்டாக துார்வாரப்படாத துயரம்

ADDED : ஜூலை 08, 2024 06:27 AM

பேரையூர்: சீமை கருவேல மரங்களை அகற்றகோரி நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகளின் பாராமுகத்தால் பேரையூர் கண்மாயை சீமை கருவேல மரங்கள் அதிகளவு ஆக்கிரமித்துள்ளன.
55 ஆண்டுகளாக துார்வாராமல் இருப்பதால் மேடாகி தண்ணீர் தேங்க வழியின்றி மழைநீர் வீணாகிறது. நீர் வரத்து வாய்க்கால் காணாமல் போயின. வரத்து வாய்க்கால் இல்லாமல் கண்மாய் வறண்டன. விவசாயம் பொய்த்தது.
பேரையூர் இச்சிக்குளம் மற்றும் பெரிய கண்மாய் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் சீமைகருவேல மரங்கள் நிறைந்துள்ளன. இக்கண்மாய் நிரம்பி அம்மாபட்டி, பாப்பையாபுரம், சுப்புலாபுரம், செங்குளம் கண்மாய் வழியாக விருதுநகர் மாவட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும். இதனால் பல ஊராட்சியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் கிடைத்து வந்தது. தற்போது எந்த பலனுமில்லாமல் கண்மாய் வறண்டிருப்பது விவசாயிகளிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
சீமைகருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரினால் அதிகளவு நீர் தேக்கலாம். முட்செடிகள் வளர்ந்துள்ளதால், கண்மாயைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் அடிக்கடி விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் எட்டி பார்த்து 'நலம் விசாரிப்பது' வழக்கமாகி விட்டது.
சீமை கருவேல மரங்களை அகற்றாமல் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.