ADDED : ஜூன் 20, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கப்பலுார் அரசு கல்லுாரி - ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு இடைப்பட்ட இடத்தில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த உதயகுமார் முயற்சியில் இடம் ஒதுக்கப்பட்டது. நிர்வாக அனுமதி கிடைத்த நிலையில் ரூ. 5.36 கோடி செலவில் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது.
முன்னாள் அமைச்சர் உதயகுமார், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, ஆர்.டி.ஓ., சாந்தி, தாசில்தார் மனேஷ்குமார், செயற்பொறியாளர் இந்துமதி, ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா, துணைத் தலைவர் வளர்மதி, உச்சபட்டி ஊராட்சி தலைவர் பிச்சையம்மாள், செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.