ADDED : ஜூலை 05, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
மேலுார்: வெள்ளலுார் விலக்கில் மதுரை இளையர் சைக்கிளிங் அசோசியேஷன் சார்பில் மதுரை ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
பெரியாறு ஒருபோக பாசன சங்கத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். டாக்டர் சரவணன் போட்டியை துவக்கி வைத்தார். 14 முதல் 23 வயதுடையவர்களுக்கு போட்டி நடந்தது. அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. போட்டியை மதுரை மாவட்ட இளையர் சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் தெய்வேந்திரன், கண்ணன், கங்காதரன், செல்வம், மற்றும் பிரபாகரன் நடத்தினர்.
