ADDED : மே 30, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவி ஆனி ஹிங்கிஸ் ராமநாதபுரம் நொச்சியூரணி கிராம விவசாயிகளுக்கு 'ரைசோபியம்' விதை நேர்த்தி குறித்து விளக்கினார்.
அவர் கூறியதாவது:
பயறு வகைகளுக்கு ரைசோபியம் உயிர் உரத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்தால் இந்த நுண்ணுயிர் காற்றில் இருக்கும் தழைச்சத்தை சேகரித்து நிலத்தை வளப்படுத்தி பயிர்களுக்கு நன்மை செய்கிறது.
இந்த ரைசோபியம் நுண்ணுயிர் பெரும்பாலும் பயறுவகைச் செடிகளின் வேர்முடிச்சுகளில் அதிகம் காணப்படும். தொடர்ந்து பயறு வகைகள் பயிரிடும்நிலங்களில் இதன் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதோடு மண்ணும் வளமாக மாறிவிடும் என்றார்.