ADDED : மே 25, 2024 04:57 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை தானம் அறக்கட்டளையின் வயலக பவுண்டேஷன் சார்பில் பல்லுயிர் பாதுகாப்பு தின விழா மற்றும் கண்மாய் சீரமைப்பு திட்ட துவக்க விழா கள்ளிக்குடி திருமால்புரத்தில் நடந்தது.
மும்பை நாப் கிசான் அமைப்பு இயக்குநர் பிபு பிரசாத்கர், முதன்மை நிதி அலுவலர் இமானுவேல், நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் (ஓய்வு) நாகூர் அலி ஜின்னா, உதவி பொது மேலாளர் சக்திபாலன் ஆகியோர் கண்மாய் ஆழப்படுத்துதல், வரத்து வாய்க்கால் சரி செய்தல், சீமை கருவேல மரங்கள் அகற்றுதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் குறித்து விளக்கினர். தானம் வயலகம் முதன்மை நிர்வாகி வெங்கடேசன், முதன்மை செயல் அலுவலர் மோகன் பல்லுயிர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை விளக்கினர்.
வேளாண் பொறியாளர் சரவண பெருமாள் வேளாண் இயந்திரங்களின் மானியத் திட்டம் குறித்து பேசினார்.
