ADDED : மே 21, 2024 06:49 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை நகர் பா.ஜ., சிறுபான்மை பிரிவினர் ஆலோசனை கூட்டம் தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் நடந்தது. மாநில சிறுபான்மை பிரிவு பொதுச் செயலாளர் கல்வாரி தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் கூறியதாவது: மக்கள் ஓட்டளிப்பது 'ஓட்டு ஜிகாத்'திற்கா அல்லது, ராமராஜ்யத்திற்கா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். இதை சிறுபான்மையினருக்கு எதிராக காங்கிரசார் திசை திருப்புகின்றனர். ராமராஜ்யம்தான் தனது கனவு என காந்தி தெரிவித்துள்ளார்.
காங்., அதை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்புவது பிரித்தாளும் சூழ்ச்சி. ஓட்டு ஜிகாத்திற்கு ஆதரவு என்பது பயங்கரவாதத்தை துாண்டும். ராமராஜ்யமோ தேச வளர்ச்சிக்கு கொண்டு செல்லும். இதை பத்தாண்டு காலத்தில் பிரதமர் மோடி செய்து காட்டியுள்ளார் என்றார்.
