ADDED : ஆக 14, 2024 12:48 AM
அ நிறம் | அளவு
பெருங்குடி : வலையங்குளம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை அரசு மருத்துவமனை, சரஸ்வதி நாராயணன் கல்லுாரி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன், கல்லுாரி முதல்வர் சந்திரன் துவக்கி வைத்தனர்.
சுகாதார மேற்பார்வையாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் அழகுமலை, பாலகிருஷ்ணன், தினேஷ்குமார், ராஜகுருநாதன், கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார், இருளப்பன், ராமகிருஷ்ணன் ஏற்பாடுகளைச் செய்தனர்.
