ADDED : ஜூன் 20, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே த.வெ.க., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. ரத்த தானம் செய்தோருக்கு அமைச்சர் நிர்மல்குமார், திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் சான்றிதழ் வழங்கினர்.
மேலுார் அரசு மருத்துவமனையில் த.வெ.க., ஒன்றிய பொறுப்பாளர் மனோஜ்குமார் ஏற்பாடு செய்த முகாமை மாவட்ட செயலாளர் விசால்கிருஷ்ணன் துவக்கி வைத்தார். ரத்ததானம் செய்தவர்களுக்கு சி.எம்.ஓ., ஜெயந்தி, டாக்டர் செந்தில்குமார் சான்றிதழ் வழங்கினர்.
