ADDED : மார் 10, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., ஜே.ஆர்.சி., ஆர்.ஆர்.சி., ரத்ததான அமைப்பு சார்பில் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர் ஜெயந்தி தின விழாவையொட்டி ரத்ததான முகாம் நடந்தது.
கல்லுாரிச் செயலர் வேதானந்த, குலபதி அத்யாத்மானந்த, முதல்வர் வெங்கடேசன், மதுரை காமராஜர் பல்கலை என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி முன்னிலை வகித்தனர். மேலக்கால், கச்சைகட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கண்ணன், கவுதம், திட்ட அலுவலர்கள் அசோக்குமார், ரமேஷ்குமார், ராஜ்குமார், தினகரன், துணை திட்ட அலுவலர்கள் செல்வராஜ், அருள்மாறன், மோகன், ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், சதீஷ்பாபு, கணபதி, காமாட்சி பங்கேற்றனர். துணை ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.