/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
/
மதுரை ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
மதுரை ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
மதுரை ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : மே 01, 2024 08:12 AM

மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் செயல்படும் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன், ரயில்வே பாது காப்பு படை அலுவலகத்திற்கு கடந்த வாரம் அடுத்தடுத்து இரு கடிதங்கள் பதிவு தபால் மூலம் வந்துள்ளன. அதில் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்பன போன்ற மிரட்டல் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.விசாரணையில் மதுரை பைகாரா பகுதியைச் சேர்ந்த வி.ஏ.ஓ., ஒருவரின் பெயர், முகவரி, அலைபேசிஎண் போன்றவற்றை தவறாக பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. மிரட்டல் கடிதங்களை அனுப்பியது மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர், அவ்வையார் தெருவைச் சேர்ந்த குமரேசன் 60, என்பது உறுதியானது.
சில நாட்களாக தலைமறைவாக இருந்த அவரை நேற்று முன்தினம் போலீசார் பிடித்தனர். இவர் ஏற்கனவே மானாமதுரை ரயில்வே போலீசாருக்கும், திண்டுக்கல் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கும் வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் அனுப்பி இருப்பதும், பிடிக்காதவர்களை சிக்கலில் சிக்க வைக்கும் நோக்கில் அவர்களின் பெயர்களில் மிரட்டல் கடிதங்களை இதுபோன்ற அலுவலகங்களுக்கு அனுப்புவதை வாடிக்கையாக கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, தேனி சிறையில் அடைக்கப்பட்டார்.