ADDED : ஆக 05, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நுால் வெளியீட்டு விழா நடந்தது.
செயலாளர் கண்ணன் வரவேற்றார். தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் கவிஞர்கள் எரியீட்டி, காளிமுத்து முன்னிலை வகித்தனர். கவிஞர் சர்மிளா எழுதிய மனதின் ஓசைகள் நுாலை சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டார். மாநில துணை பொதுச்செயலாளர் கவிஞர் வெண்புறா, மாவட்ட குழு உறுப்பினர் மூரா, மலர், மாவட்ட செயலாளர் பசுமலை பாரதி, நகராட்சி தலைவர் முகமது யாசின், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொருளாளர் சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.
