ADDED : ஜூலை 19, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் பாரதிதாசன் வாசகர் வட்டத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது.
நிர்வாகி ஜீவா வரவேற்றார். நா.த.க., மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சிவராமன், பாவலர் சூர்யா எழுதிய இளைய சமூகமே எழுக என்ற கவிதை நுாலை வெளியிட தமிழர் மக்கள் இயக்க தலைமைக் குழு உறுப்பினர் தங்கம் அடைக்கன் பெற்றுக் கொண்டார். பாவலர் சூர்யா ஏற்புரை வழங்கினார். விழாவில் சமூக செயல்பாட்டாளர்கள் மணிக்குமார், திருமாறன், பாண்டியராஜன், தேவி பேசினர். பாரதிதாசன் வாசகர் வட்ட நிர்வாகி ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்
