ADDED : மே 24, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பேரூராட்சியில் மதுரை -திண்டுக்கல் மெயின் ரோட்டோரம் அடுத்தடுத்து குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
சோழவந்தான் இரும்பாடி வைகை ஆற்றில் இருந்து வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்கின்றனர். வைகை ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் கொண்டுவரப்படும் குடிநீர் போடிநாயக்கன்பட்டி, தாதம்பட்டி பகுதி தொட்டிகளில் ஏற்றப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
கடந்த 4 நாட்களாக வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை உட்பட மெயின் ரோட்டோரம் அடுத்தடுத்து 4 இடங்களில் குழாய் உடைந்து தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறுகிறது. பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைபை சரிசெய்ய வேண்டும்.
