/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மலேசிய போட்டியில் மதுரைக்கு வெண்கலம்
/
மலேசிய போட்டியில் மதுரைக்கு வெண்கலம்
ADDED : ஜூன் 01, 2024 05:03 AM

மதுரை: மலேசியாவில் நடந்த சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை மங்கையர்க்கரசி பள்ளியின் 5ம் வகுப்பு மாணவர் கார்த்திகேயன் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றார்.
மலேசியா சிலம்ப கழகம், இன்டர்நேஷனல் சிலம்பம் பெடரேஷன் சார்பில் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தாரைச் சேர்ந்த 400 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் 7 முதல் 9 வயது ஆடவர் பிரிவு தனித்திறமை போட்டியில் கார்த்திகேயன் வெண்கல பதக்கம், ஒற்றை அலங்கார சுற்றுப் போட்டியிலும் வெண்கலம் வென்றார்.
மாணவரை தாசில்தார் மீனாட்சி, கவுன்சிலர் பாமா, விராட்டிப்பத்து ஸ்ரீ மாருதி சிலம்பப் பள்ளி பயிற்சியாளர்கள் ராஜ மகா குரு, ராமகிருஷ்ணன், சேது லட்சுமி வாழ்த்தினர்.