ADDED : ஜூலை 24, 2024 05:47 AM
மதுரை : மதுரை தானம் அறக்கட்டளை சார்பில் மத்திய பட்ஜெட் ஓர் பார்வை எனும் தலைப்பில் கல்லுாரி மாணவர்களின் கலந்துரையாடல் நடந்தது.
தானம் கல்வி நிலைய இயக்குநர் குருநாதன் பட்ஜெட் குறித்து மாணவர்களுடன் விவாதித்தார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இன்று வரை என்ற தலைப்பில் விரிவுரையாளர் நிர்மல்குமார் பேசினார்.
மாநிலம் வாரியாக பட்ஜெட் வளர்ச்சி, எதிர்பார்ப்புகள் குறித்து பிற மாநில அறிவியல், பொருளாதார நிபுணர்கள் காணொலியில் பேசினர்.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மங்கையர்க்கரசி கல்லுாரி, சுகம் மருத்துவ செவிலியர் பயிற்சி பள்ளி, அமெரிக்கன் கல்லுாரி, ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
கல்வி நிலைய துணை இயக்குநர் தியாகராஜன் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் வாசுநாதன், கல்வி நிலைய பேராசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

