ADDED : ஏப் 27, 2024 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கட்டக்காளைபட்டி முனியாண்டி சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
பெரிய மாடு பந்தயத்தில் 10 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதில் நகரம்பட்டி வைத்யா, சின்னமாங்குளம் அழகு, செம்மினிபட்டி ஆண்டிபாலகர், மட்டங்கிபட்டி காவியா மாடுகள் நான்கு பரிசுகளை வென்றன.
சிறியமாடு பந்தயத்தில் 20 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் அயிலாங்குடி மலைச்சாமி, பரவை சின்னச்சாமி, பல்லவராயம்பட்டி வர்ஷாஇளமாறன், கட்டகாளைப்பட்டி ஆர்.கே. பிரதர்ஸ், நொண்டி கோவில்பட்டி முருகன், அயிலாங்குடி அழகுராஜா மாடுகள் ஆறு பரிசுகளை வென்றன.

