/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீபங்களுக்கு பசு நெய் உபயதாரருக்கு அழைப்பு
/
தீபங்களுக்கு பசு நெய் உபயதாரருக்கு அழைப்பு
ADDED : மே 31, 2024 05:28 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்கள் சன்னதிகளின் தீபங்களுக்கு பசு நெய் வழங்க விரும்பும் பக்தர்கள், உபயதாரர்களுக்கு கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
கோயில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் சன்னதிகள் உள்ளன. அங்குள்ள விளக்குகளில் தினமும் பசு நெய்யால் தீபம் ஏற்றப்படுகிறது. அந்த விளக்கு தீபங்களுக்கு பசு நெய் வழங்க விரும்பும் பக்தர்கள், உபயதாரர்கள் கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்கி ரசீது பெற்றுக் கொள்ளலாம். நெய் தீபம் ஏற்ற பணம் வழங்க விரும்பும் பக்தர்கள் ஒரு கிலோவுக்கு ரூ. 400 செலுத்தி ரசீது பெறலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.