/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்மாய் நீரை தடுக்கும் கால்வாய் புதர்கள்
/
கண்மாய் நீரை தடுக்கும் கால்வாய் புதர்கள்
ADDED : மே 28, 2024 05:16 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நிலையூர் கால்வாய் வழியாக திருப்பரங்குன்றம், அவனியாபுரம், பெருங்குடி கண்மாய்களுக்கு செல்லும்.
அக்கால்வாய்க்குள் விளாச்சேரி முதல் சந்திராபாளையம் வரை செடி கொடிகள், புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.
குன்றத்து கண்மாய்களுக்கு சில நாட்களுக்குமுன்பு தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீரில் மிதந்த பிளாஸ்டிக் உள்பட அனைத்து குப்பையையும் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர், விவசாயிகள் அகற்றினர்.
கால்வாயின் மேலுள்ள தரைப்பாலத்தில் தேங்கி நின்ற குப்பையை நீர்வளத் துறையினர் அகற்றினர்.
பருவமழை துவங்கும் முன்பாக, கால்வாய்க்குள் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் கண்மாய் முழுமையாக நிரம்பாது என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.