/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேலவளவு கொலை வழக்கில் முன்கூட்டியே விடுதலை ரத்து; உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஆக 01, 2024 11:29 PM

மதுரை : மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சித் தலைவராக இருந்த முருகேசன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் சேகரை முன்கூட்டியே விடுதலை செய்த அரசின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.
மேலுார் அருகே முத்துவேல்பட்டி மணிகண்டன் தாக்கல் செய்த மனு:மேலவளவு ஊராட்சித் தலைவராக இருந்த முருகேசன் உட்பட 6 பேர் 1997 ல் கொலை செய்யப்பட்டனர்.
இதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் கவட்டையம்பட்டி சேகரும் ஒருவர். அனைவரையும் நிபந்தனைகள் அடிப்படையில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்து 2019 ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.விடுதலையான சேகர் பொது அமைதிக்கு எதிராக செயல்படுகிறார். 2023 அக்.12 ல் சிலரிடம் தகராறு செய்தார். அவரது மனைவியின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
இதனால் கத்தியால் என்னை மற்றும் பாண்டி என்பவரை சேகர் தாக்கினார். காயம் ஏற்பட்டது. மேலவளவு போலீசார் வழக்கு பதிந்தனர். நிபந்தனைகளை மீறியதால் சேகரை முன்கூட்டியே விடுதலை செய்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, கே.ராஜசேகர் அமர்வு: சேகரை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.