ADDED : மார் 05, 2025 05:44 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தங்கப்பாண்டி50, கீரிப்பட்டி மார்கண்டன்45, சென்னை திருவான்மியூர் அழகுமலை49. இவர்கள் 2018 ல் ஒரு வாகனத்தில் 240 கிலோ கஞ்சா கடத்தியபோது சிட்டம்பட்டி டோல்கேட் அருகே மதுரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள் வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.
