ADDED : ஜூலை 25, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் பைபாஸ் ரோடு அருகே உள்ள மின் கம்பத்தில் நேற்று முன்தினம் இரவு உசிலம்பட்டியில் இருந்து ராஜபாளையம் சென்ற கார் மோதியது.
இதில் மின்கம்பம் உடைந்தது. உயர் மின்னழுத்த ஒயர்கள் அறுந்து விழுந்தன. ஆள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேரையூரில் நேற்று காலை வரை மின்சாரம் தடைப்பட்டது. காரில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர்.
