/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேளாண் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு
/
வேளாண் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு
ADDED : ஜூன் 25, 2024 06:10 AM
மதுரை : மாநில வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தில் வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக்க நிதியுதவி வழங்கப்படுகிறது.
வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது: 21 - 40 வயதுக்குட்பட்ட வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம். அரசு, தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கக்கூடாது. பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தல் திட்டம் (பி.எம்.எப்.எம்.இ.), வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் (ஏ.ஐ.எப்.) கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுயதொழில்கள் தொடங்கலாம். வங்கிக்கடன் உதவியுடன் கூடிய தொழில்களுக்கு மட்டுமே அனுமதி.
உரிய ஆவணங்களுடன் ஜூன் 30 மாலை 6:00 மணிக்குள் அந்தந்த வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு கள ஆய்விற்கு பின், வங்கிக்கடன் அடிப்படையில் மானியமாக ரூ.ஒரு லட்சம் விடுவிக்கப்படும் என்றார். கூடுதல் விவரங்களுக்கு agriinfra.dac.gov.in இணையதளத்தை அணுகலாம்.