/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலி நியமன உத்தரவு தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு * தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

ADDED : ஜூன் 13, 2024 02:42 AM
மதுரை,:மதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டி ஜீவகன். இவர், தி.மு.க., புதுார் பகுதி செயலராக இருந்தார்.
தனியார் பாலிடெக்னிக்கில் விரிவுரையாளராக பணியாற்றிய விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த இளையராஜாவிடம், 42, மதுரை பசுமலை அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக 10 லட்சம் ரூபாய் பேசி முடித்து, 2019 மார்ச்சில் 7 லட்சம் ரூபாய் பெற்றார்; அதற்காக ஆசிரியர் பணி நியமன உத்தரவும் வழங்கினார்.
சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இளையராஜா சென்றபோது, அந்த உத்தரவு போலியானது என தெரிந்தது.
இதையடுத்து, கிறிஸ்டி ஜீவகனிடம் பணத்தை திருப்பிக் கேட்டார். ஆனால், அவர் தராமல் ஏமாற்றியதால் தல்லாகுளம் போலீசில் இளைய ராஜா புகார் அளித்தார். இதன்படி கிறிஸ்டி ஜீவகன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
கிறிஸ்டி ஜீவகன் ஏற்கனவே மோசடி வழக்கு ஒன்றில் சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அப்போது கட்சிப் பதவியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
ஆனாலும், தி.மு.க.,வில் உள்ள செல்வாக்கு காரணமாக புதுார் பகுதிக்கு புதிய பகுதி செயலரை இதுவரை நியமிக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் அவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.