/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காந்தியை அவமதித்த 'பேஸ்புக்' நபர் மீது வழக்கு
/
காந்தியை அவமதித்த 'பேஸ்புக்' நபர் மீது வழக்கு
ADDED : ஆக 18, 2024 01:59 AM
மதுரை:மதுரை, காமராஜர்புரத்தை சேர்ந்த வேல்முருகன், பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி மாநில செயலர். ஆக., 11ல் மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தார்.
அதில், கல்யாண சுந்தரம் என்ற முகநுால் பெயரில் காந்தியை அவதுாறாக குறிப்பிட்டு அவரது கையில் அரிவாள் உள்ளது போல் பதிவிட்டு, காந்திய கொள்கையை பின்பற்றுபவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது.
உதவி கமிஷனர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆக., 19ல் காந்தி மியூசியம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, நேற்றுமுன்தினம் கல்யாணசுந்தரம் மீது, ஒரு நபரை வேண்டுமென்றே அவமதித்தல், பகை, வெறுப்பு, தவறான உணர்வுகளை ஏற்படுத்துதல் உட்பட நான்கு பிரிவுகளின்கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கல்யாணசுந்தரம் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என, விசாரணை நடக்கிறது.

