/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தெற்குவாசலில் புதுப்பாலம் அமைக்க வழக்கு
/
தெற்குவாசலில் புதுப்பாலம் அமைக்க வழக்கு
ADDED : ஜூன் 26, 2024 07:07 AM
மதுரை : உசிலம்பட்டி அருகே முத்துப்பாண்டிபட்டி சூரியபாண்டி. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை தெற்குவாசல்-அருப்புக்கோட்டை ரோடு இடையே ரயில்வே மேம்பாலம் 1989 ல் பயன்பாட்டிற்கு வந்தது. சரியாக பராமரிக்கவில்லை. கைப்பிடி சுவர்கள் சேதமடைந்துள்ளன. கான்கிரீட் கம்பிகள் துருப்பிடித்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன.
டூவீலரில் சென்ற ஒருவர் தவறி பாலத்திலிருந்து கீழே விழுந்து இறந்தார். சுவரில் அரசமரம் முளைத்துள்ளது. மக்கள் வேறுவழியின்றி அச்சத்துடன் பயணம் செய்கின்றனர். அப்பாலத்தை அகற்றிவிட்டு புது மேம்பாலம் அமைக்கக்கோரி தமிழக நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: ரயில்வே துறையை ஒரு எதிர்மனுதாரராக இணைக்க வேண்டும். விசாரணை அடுத்தவாரம் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.