/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தெருநாய்களை கட்டுப்படுத்த வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
/
தெருநாய்களை கட்டுப்படுத்த வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தெருநாய்களை கட்டுப்படுத்த வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தெருநாய்களை கட்டுப்படுத்த வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஆக 09, 2024 06:46 AM

மதுரை : தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: ரோடுகள், வீதிகளில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. வாகனங்களின் குறுக்கே பாய்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மனிதர்களை கடிப்பதால் ரேபீஸ் நோய் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கேரளாவில் 2019 ல் 87 ஆயிரம் தெரு நாய்களுக்கு அம்மாநில அரசு கருத்தடை செய்தது. ரேபீஸ் நோய் வராமல் தடுக்க 2020 ல் சென்னையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக அரசு அரசு செயல்படுத்தியது.
தெரு நாய்கள் மீதான மேலாண்மையானது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் நகராட்சிகள் சட்டத்தின் கீழ் வருகிறது. நாய்க்கடியை குணப்படுத்தும் தடுப்பூசி மருந்தை அனைத்து அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பில் வைக்க வேண்டும்.
பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு மத்திய கால்நடை, மீன்வளத்துறை செயலர், சுகாதாரத்துறை செயலர், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர், சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஆக.,29 க்கு ஒத்திவைத்தது.