ADDED : செப் 18, 2024 03:53 AM
அ நிறம் | அளவு
மதுரை : பள்ளிக்கல்வித்துறை சார்பில் எம்.சத்திரப்பட்டி குறுவட்ட பள்ளிகளுக்கான கேரம் போட்டியில் சின்னப்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
14 வயது ஆடவர் இரட்டையர் பிரிவில் ஜீவன், தீனதயாளன் வெற்றி பெற்று வருவாய் மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர். ஊராட்சி மன்றத் தலைவி சக்திமயில், தலைமையாசிரியர் ராஜபாண்டியன், உடற்கல்வி ஆசிரியர் ஜானகிராமன் பாராட்டினர்.
