
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி, : உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் பரமசிவம் வரவேற்றார்.
பள்ளித்துணை ஆய்வாளர் செல்வம், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் உடற்கல்வியியல் கல்லுாரி நிறுவனர் வாலந்துார் பாண்டியன், நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மதன்பிரபு உட்பட பலர் பங்கேற்றனர். குறுவட்ட பள்ளி மாணவர்களுக்கு தடகள இறுதிப்போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கினர்.