ADDED : ஆக 31, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாம்பாள்புரம் அபுபக்கர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
செல்லுார் கண்மாயை துார்வார வேண்டும். சீமைக்கருவேல மரங்கள் அதிகம் உள்ளன. அவை நீரை உறிஞ்சுகின்றன. அவற்றையும், ஆகாயத்தாமரைகளையும் அகற்ற வேண்டும். கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் கலெக்டர், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்.,20 க்கு ஒத்திவைத்தது.