/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாற்காலியே தேய்ந்தாலும் பணிஓய்வு வரை இடமாறுதல் இல்லை: பொதுப்பணி, நீர்வளத்துறை கண்காணிப்பாளர்கள் புலம்பல்
/
நாற்காலியே தேய்ந்தாலும் பணிஓய்வு வரை இடமாறுதல் இல்லை: பொதுப்பணி, நீர்வளத்துறை கண்காணிப்பாளர்கள் புலம்பல்
நாற்காலியே தேய்ந்தாலும் பணிஓய்வு வரை இடமாறுதல் இல்லை: பொதுப்பணி, நீர்வளத்துறை கண்காணிப்பாளர்கள் புலம்பல்
நாற்காலியே தேய்ந்தாலும் பணிஓய்வு வரை இடமாறுதல் இல்லை: பொதுப்பணி, நீர்வளத்துறை கண்காணிப்பாளர்கள் புலம்பல்
ADDED : ஜூன் 26, 2024 07:23 AM
மதுரை : பணி ஓய்வு பெறும் வரை இடமாறுதல் கிடைக்காமல் அவதிப்படுவதாக பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையில் ஜூனியர் உதவியாளர் பணியிடத்தில் நியமிக்கப்படுபவர்கள் அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில் உதவியாளராக பதவி உயர்வு பெறுகின்றனர். பணிமூப்பு அடிப்படையில் காலியிடத்தைப் பொறுத்து 10 முதல் 15 ஆண்டுகளில் கண்காணிப்பாளராகின்றனர். இது தாசில்தார் பணிக்கு இணையான பதவி என்பதால் கெஜட்டட் அதிகாரியாகவும் உள்ளனர். பணி ஓய்வு பெறுவது வரை ஒரே அலுவலகத்தில் இருப்பதால் இடமாறுதல் எதிர்பார்க்கும் எங்களுக்கு வாய்ப்பே கிடைப்பதில்லை என்கின்றனர் கண்காணிப்பாளர்கள்.
அவர்கள் கூறியதாவது:
கண்காணிப்பாளர் பணியில் உள்ளவர்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 250க்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் ஒரே இடத்தில் பணியாற்றுகின்றனர். வெளியூரில் உள்ளவர்கள் விருப்ப மாறுதலில் கூட வேறிடம் மாற முடியவில்லை. வருவாய்த்துறை மற்றும் பிற துறைகளில் 3 ஆண்டுகளில் இடமாறுதல் கட்டாயமாக்கப்படுகிறது. பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையில் மட்டும் விதிவிலக்காக செயல்படுகின்றனர்.
உதவியாளராக இருந்து கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெறுபவர்கள், ஓய்வும் பெறும் வரை அந்த அலுவலகத்தில் இருந்து இடமாறுதல் பெறுவதே இல்லை. அரசியல் அழுத்தம் கொடுத்து அதே இடத்தை தக்கவைக்கின்றனர். ஒரே வளாகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையில் நிலத்தடி நீர்மட்டம், சுற்றுச்சூழல் துறை, திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்டம் போன்ற பல பிரிவுகள் இருந்தாலும் ஒரு அலுவலகத்தில் இருந்து அடுத்த அலுவலகத்திற்கு கூட இடமாறுதல் பெறுவதில்லை.
கெஜட்டட் அதிகாரி நிலையில் உள்ள கண்காணிப்பாளர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயமாக இடமாறுதல் தரவேண்டும். அதன் மூலம் விருப்ப மாறுதல் கேட்கும் எங்களைப் போன்றவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றனர்.