ADDED : செப் 15, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் அலங்காநல்லுார் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தன. இதில் வாடிப்பட்டி புனித சார்லஸ் பள்ளி மாணவி யோகா 14 வயது பிரிவில் பங்கேற்றார். தட்டு எறிதல்மற்றும் 600 மீ., ஓட்டத்தில்முதல் பரிசும், 400 மீ., ஓட்டத்தில் 2ம் பரிசும் பெற்றார்.
இந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மாணவி, உடற்கல்வி ஆசிரியர் மோகன்தாஸ், பயிற்சியாளர் வெள்ளைச்சாமியை தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.